பருவமழை பாதிப்பை எதிர்கொள்ள போதிய ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் வேலு

பருவமழை பாதிப்பை எதிர்கொள்ள போதிய ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் வேலு
X

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் வேலு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை தங்க வைக்க போதிய ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை தங்க வைக்க போதிய ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் கூறினார். இன்று ஏரிகளில் இருந்து வெளியேறிய வெள்ளம் சூழ்ந்து பகுதிகளை இன்று காலை பார்வையிட்டார்.பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் அதிக மழை பெய்து வருகிறது.

திருவண்ணாமலை சுற்றியுள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. சில ஏரிகள் உடைகிற தருவாயில் இருக்கிறது அதிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் மாவட்ட ஆட்சியருடன் வேங்கிக்கால் ஏரியை ஆய்வு செய்தோம் அப்போது தொடர்ந்து தண்ணீர் செல்லும் பாதைகள் துரித நடவடிக்கை சீரமைக்கப்பட்டு வந்தது அந்த நடவடிக்கையின் காரணமாக தற்போது குடியிருப்பு பகுதிகளில் அதிகம் பாதிப்பு இல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் 20க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நீர் வரத்து பாதைகள் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இனி வரும் மழைக் காலங்களில் மக்களுக்கு குடியிருப்புகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு முதல்வர் உத்தரவின் பேரில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை பாதிப்புகள் ஏற்பட்டால் பொதுமக்களை தங்க வைக்கவும் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யவும் போதிய ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இனிவரும் காலம் மழை காலம் என்பதால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அனைத்து ஏரிகளை தினமும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!