திருவண்ணமலையில் இன்று 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணமலையில் இன்று 1,008 சங்காபிஷேகம்  நடைபெற்றது.
X

அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்ற 1,008 சங்காபிஷேகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா 3-ம் நாளான இன்று 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 3-ம் நாள் விழாவான இன்று காலை கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

பின்னர் மேளதாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு எழுந்தருளினர். அங்கிருந்து 5-ம் பிரகாரத்திற்கு விநாயகர் மற்றும் சந்திரசேகரர் கொண்டு வரப்பட்டு ராஜகோபுரம் முன்பு எழுந்தருளினர்.

இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவின் 3-ம் நாள்உற்சவத்தில், 1,008 சங்காபிஷேகம் காலை நடைபெற்றது. அப்போது சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் திரண்டு நின்று வழிபட்டனர்.

மேலும் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!