மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு
X
சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்தார்.

தேசூரை அடுத்த, வயலூர் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவருடைய மகன் ஸ்ரீதர் (வயது 32). கூலித்தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் கன்னிகாபுரம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அங்குள்ள குறுக்கு சாலையில் சென்றபோது மோட்டார்சைக்கிளிலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோனியா சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!