குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு
X

சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த கற்பகம்

சேத்துப்பட்டு அருகே குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.

சேத்துப்பட்டை அடுத்த நம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவருடைய மனைவி கற்பகம் (வயது 45). இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது 3-வது மகன் விஜயகுமார் (18) பிளஸ்-2 படித்து வருகிறார்.

தொடர் மழையால் வீட்டின் சுவர் ஈரமாகி வலுவிழந்து காணப்பட்டது. நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சுவர் திடீரென இடிந்து வீட்டுக்குள் விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட கற்பகம் உயிரிழந்தார்.

இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட அவரது மகன் விஜயகுமார் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து விஜயகுமாரை அவர்கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அறிந்த சேத்துப்பட்டு போலீசார் கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

தகவலறிந்த சேத்துப்பட்டு வட்டாட்சியர் இடிந்த வீட்டை நேரில் சென்று பார்வையிட்டார். . இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!