போளூர் வீட்டின் மீது லாரி மோதி பெண் சாவு

போளூர் வீட்டின் மீது லாரி மோதி பெண் சாவு
X
போளூர் அருகே வீட்டின் மீது ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில், சிகிச்சை பலனின்றி பெண் பரிதாபமாக இறந்தார்.

போளூர் அருகே ராந்தம் கிராமம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகவேல், விவசாயி. கடந்த 7-ந்தேதி இவரது வீட்டுக்கு எதிரில் உள்ள ரேஷன் கடைக்கு தச்சாம்பாடி கிடங்கில் இருந்து அரிசி மூட்டைகள் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முருகவேல் வீட்டின் மீது மோதியது.

இதில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. மேலும் வீட்டினுள் இருந்த முருகவேல் மனைவி பிரியா மற்றும் உறவினர்கள் பச்சையம்மாள், காசியம்மாள், ஜெயவந்தனா ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் காசியம்மாளை மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போளூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story