போளூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?

போளூர்  பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?
X
நகராட்சியாக தரம் உயர்த்த அனைத்து தகுதியிருந்தும் போளூர் இன்னமும் பேரூராட்சியாகவே தொடர்கிறது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பேரூராட்சிகள் உள்ளது. அதில் மிகப்பெரிய பேரூராட்சியில் போளூர் ஒரு பேரூராட்சி ஆகும். பேரூராட்சிகளில் முதல் நிலை இரண்டாம் நிலை மூன்றாம் நிலை சிறப்பு நிலை பேரூராட்சிகள் என வருட வருமானத்தில் ஏற்றவாறு பிரிக்கப்படுகின்றன. இதில் மூன்றாம் நிலை பேரூராட்சி என்பது 10 லட்சத்திற்கு குறைந்த வருவாய் உடையதாகும். பேரூராட்சி என்பது வருடத்திற்கு 50 லட்சத்திற்கு மேலும், சிறப்பு நிலை ஊராட்சி என்பது ஒரு கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவது என பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரூராட்சி 18 பேரூராட்சி வார்டுகள் கொண்டது. போளூர் சட்டமன்றத் தொகுதியிலும் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் உட்பட்டது. இந்த போளூர் நகரம் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மையத்தில் உள்ளது. சாலை போக்குவரத்திற்கும் ரயில் போக்குவரத்தும் முக்கியத்துவம் பெற்ற நகரமாக விளங்குகிறது.

தற்போது தமிழக முதல்வர் ஒரு சில பேரூராட்சிகளை இரண்டாம் நிலை நகராட்சிகள் ஆக மாற்றப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு பேரூராட்சியில் மக்கள் தொகை 30 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் நகராட்சியாக மாற்றப்படும். போளூர் பேரூராட்சியில் தற்போதைய மக்கள் தொகை சுமார் 32 ஆயிரம் என்று இருக்கிறது. ஒரு பேரூராட்சி நகராட்சியாக மாறுகிறது என்றால் மக்கள் கட்டும் வரி அதிகமாகும் என்ற கருத்து நிலவி வருகிறது.

ஆனால் உண்மை நிலை அதுவல்ல, பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்துவது என்பது வளர்ச்சிக்கான முன்னோட்டம் தான். கடந்த 10 ஆண்டுகளாக போளூர் நகரம் வளர்த்துக் கொண்டே தான் வருகிறது. போளூருக்கு புறவழிச்சாலை வந்ததால் கிழக்கே வெண்மணி வரையிலும், வடக்கே குன்னத்தூர் வரையிலும், தெற்கே வசூர் வரையிலும் வளர்ந்திருக்கிறது. போளூர் சுற்றியுள்ள கிராமங்களில் விரிவடைந்து பல வணிக நிறுவனங்கள் அதிகமாக வந்துள்ளது. நகரம் விரிவடைய குடியிருப்புகள் அதிகமாகிறது அதுபோல் வருவாய் அதிகம் அதிகரிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தொழில் நிறுவனங்கள் அதிகமாகும் வாய்ப்பு கூடுகிறது. நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் ஒருசேர முயற்சித்தால் கண்டிப்பாக வரும் என்று பொது மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!