ரெட் கிராஸ் சார்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

ரெட் கிராஸ் சார்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
X
போளூர் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

போளூர் வட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏழு வீடுகளில் நீர் ஊற்று எடுத்து மழைநீர் தேங்கி உள்ளதால் 9 ஆண்கள் 11 பெண்கள் 13 குழந்தைகள் என மொத்தம் 33 பேர் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ரெட் கிராஸ் சங்கம் சார்பில் வட்டாட்சியர் சண்முகம் அங்கு தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

ரெட்கிராஸ் சங்கம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்டு பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டவர்களின் உணவுக்காக மூன்று மூட்டை அரிசி, பிஸ்கட்டுகள் , துணிகள், மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது.

ரெட் கிராஸ் சங்கத் தலைவர் வழக்கறிஞர் நடராஜன் தலைமை தாங்கினார் . செயலாளர் சுரேஷ், டாக்டர் ஷாநவாஸ் செயற்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தற்போது அங்கு தங்கியிருந்த நீர் ஜேசிபி உதவியுடன் உடனடியாக அப்புறப்படுத்தும் பணி துவங்கியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!