/* */

ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்

கண்ணமங்கலம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் 5 கிமீ சுற்றி செல்ல வேண்டியதுள்ளது.

HIGHLIGHTS

ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர்
X

மழைநீர் தேங்கியிருக்கும் சுரங்கப்பாதை 

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமம் வழியாக காட்பாடி- விழுப்புரம் மின்சார ரெயில் டிராக்கில் என்ற சுரங்க பாதையை ரெயில்வே துறையினர் அமைத்துள்ளனர். இந்த சுரங்க பாதை அமைக்கக்கூடாது என அப்போதே கிராமமக்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

தற்போது மழைக்காலம் என்பதால் இந்த சுரங்க பாதையில் அளவுக்கதிகமாக தண்ணீர் தேங்கி உள்ளது. ஊராட்சி சார்பில் அவ்வப்போது 2 மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வந்தனர். மின்மோட்டார் பழுது காரணமாக கடந்த சில தினங்களாக தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை.

இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்ல முடியாமல் உள்ளூர்வாசிகள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சுரங்கப்பாதையில் அளவுக்கதிமான தண்ணீர் தேங்குவது குறித்து எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கவில்லை. இதனால் வெளியூர் பொதுமக்கள் ஆழம் தெரியாமல் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொள்கின்றனர். அப்போது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவர்களை மீட்கின்றனர்.

கடந்த ஒரு வாரமாக தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகத்தினர் காலதாமதம் செய்து வந்தனர். இதனால் துணை தலைவர் சித்தார்த்தன் மற்றும் ரெயில்வே டிராக் அருகே வசிக்கும் ஏ.எஸ்.ஆர். பகுதி மக்கள் ஆழ்துளை மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். இதையறிந்த ஊராட்சி தலைவர் வெங்கடேசன், மாற்று மின் மோட்டார் கொண்டு வந்து தண்ணீரை வெளியேற்ற முயன்றார். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் அமைத்த ஆழ்துளை மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி அருகே உள்ள ஏரிக்கால்வாயில் விடப்பட்டது.

சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால், ஆபத்தான முறையில் ரெயில்வே டிராக்கை வாகன ஓட்டிகள் கடந்து வருகின்றனர். எனவே சுரங்கப்பாதை அருகே மாற்று வழி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Updated On: 9 Oct 2021 7:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்