மயானத்தை சூழ்ந்த மழைநீர்: கிராம மக்கள் அவதி

மயானத்தை சூழ்ந்த மழைநீர்: கிராம மக்கள் அவதி
X

மயானத்தை சூழ்ந்துள்ள மழைநீர்

போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் தொடர் மழையால் மயானத்தில் மழைநீர் தேங்கியிருப்பதால் கிராம மக்கள் அவதி

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் பூளைமேடு, காந்திநகர், மேல் கொட்டாய் ஆகிய கிராமங்களில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கொல்லைமேடு சாலை அருகே சுமார் இரண்டு ஏக்கரில் மயானம் அமைந்துள்ளது.

தொடர் மழையால் இந்து மயானத்தில் கடந்த சில வாரங்களாக தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் ஆக்கிரமிப்பில் உள்ளது , இதனால் இறந்தவர்களை புதைக்கவோ, எரிக்கவோ முடியாமல் கிராம மக்கள் திணறி வருகின்றனர்.

தற்போது ஊராட்சி நிர்வாகத்தினர் போளூர் வட்டாட்சியரிடம் முறையிட்டு மழை நீர் வெளியேற்றவும் , தாழ்வாக உள்ள மயானத்தில் மண் கொட்டி உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Tags

Next Story
ai future project