செண்பகத்தோப்பு அணை திறப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை

செண்பகத்தோப்பு அணை திறப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை
X

செண்பகத்தோப்பு அணை

செண்பகத்தோப்பு அணை இன்று திறக்கப்பட உள்ளதால் கமண்டல நதி கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு உதவி பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

திருவண்ணாமலை மாவட்டம் செண்பகத்தோப்பு அணை தற்போது பெய்து வரும் மழையால் நிரம்பி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 4 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் செண்பகத்தோப்பு அணை இன்று மதியத்திற்கு மேல் திறக்கப்பட உள்ளது, எனவே கமண்டல நதி கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்