/* */

சேத்துப்பட்டில் 100 நாள் வேலைக்கு புதிய அட்டை வழங்க கோரி கிராம மக்கள் மனு

சேத்துப்பட்டு ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலைக்கு புதிய அட்டை வழங்கக்கோரி கிராம மக்கள் மனு.

HIGHLIGHTS

சேத்துப்பட்டில் 100 நாள் வேலைக்கு புதிய அட்டை வழங்க கோரி கிராம மக்கள் மனு
X

100 நாள் வேலைக்கு புதிய அட்டை வழங்கக்கோரி கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

சேத்துப்பட்டு ஒன்றியம் கூடலூர் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்டோருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்குமாறு பலமுறை கேட்டும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

புதிய அடையாள அட்டை வழங்க ஊராட்சி செயலாளர் சரவணன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி சேத்துப்பட்டு ஒன்றிய அலுவலகத்துக்கு 30-க்கும் மேற்பட்டோர் ஒன்றிய கவுன்சிலர் உமாமகேஸ்வரி வெங்கடேசன் தலைமையில் வந்தனர். அப்போது அவர்கள், தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். புதிய அடையாள அட்டை வழங்க வேண்டும், என கேட்டு மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Updated On: 19 Jun 2022 7:14 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!