திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட தலைவர் உத்திரகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் காளிமுத்து முன்னிலை வகித்தார். பொருளாளர் சங்கர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ஏழுமலை கலந்து கொண்டு பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும், சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் , ரத்து செய்யப்பட்ட பட்டப் படிப்பு ஊக்க ஊதியத்தை வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பூதியும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

போளூர்

இதே போல் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் போளூர் ஒரு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட கிளை செயலாளர் மாலதி தலைமை வகித்தார் வட்ட செயலாளர் மயில் அரசன் போராட்டக் குழு தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்ட பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலாளர் மகாலிங்கம் கலந்து கொண்டு பேசும்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் . கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார் வட்ட பொருளாளர் இளைய குமார் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கீழ்பெண்ணாத்தூர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட கிளை தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இணை செயலாளர் பிரவீன் குமார் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் வட்ட பொருளாளர் உதயகுமார் நன்றி கூறினார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?