வரும் மக்களவை தேர்தலிலும் வெற்றி: பா.ஜ.க.மாநில செயலாளர் பேட்டி

வரும் மக்களவை தேர்தலிலும்  வெற்றி: பா.ஜ.க.மாநில செயலாளர் பேட்டி
X

திருவண்ணாமலையில் பா.ஜ.க. மாநில செயலாளர் சூர்யா பேட்டி அளித்தார்.

வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெறும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் தெரிவித்தாா்.

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெறும் என்று கட்சியின் மாநிலச் செயலா் எஸ்.ஜி.சூா்யா தெரிவித்தாா்.

திருவண்ணாமலையில் பா.ஜ.க.வின் 9 ஆண்டுகள் சாதனைகள் குறித்த விளக்கக் கூட்டத்தில் பா.ஜ.க. மாநில செயலாளர் சூர்யா கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.-

கொரோனா தொற்று காலத்தில் திறமையான முடிவுகளை எடுத்து நோய் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்தது மத்திய அரசு. இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்காக முத்ரா கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கா்நாடகத்தில் இலவச வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது போலவே 2024 மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரஸ் கனவு காணுகிறது. ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துவிட்டன.

ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்த பிறகும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக வாக்குறுதி அளித்தனா். 2 ஆண்டுகள் முடிவடைந்தும் யாருக்கும் வழங்கப்படவில்லை. 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமா் மோடி தலைமையிலான பா.ஜ.க. 400 இடங்களில் வெற்றி பெறும் என்றாா்

பேட்டியின்போது, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவா் பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொதுச் செயலா்கள் ரமேஷ், முருகன், பொருளாளா் ப்பிரமணியன், பாஜகவின் ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில துணைத் தலைவா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பா.ஜ.க.வின் ஒன்பது ஆண்டுகள் சாதனைகள் குறித்து பா.ஜ.க. மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாநில தலைவர் லோகநாதன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம், அனைவருக்கும் குடிநீர் திட்டம் குறித்தும் விளக்கி பேசினார். மேலும் இந்த பேட்டியின் போது மாவட்ட பா.ஜ.க. தலைவா் ஏழுமலை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in biotech and healthcare