போளூரில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

போளூரில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X
போளூரில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மருத்துவ வட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதன்படி போளூர் பேருந்து நிலையம், வசந்தம் நகர், வீரப்பன் தெரு, அம்மன் கோவில் அருகில், அல்லி நகர், ரமேஷ் திருமண மண்டபம், டான் பாஸ்கோ பள்ளி, டி எம் பள்ளி, அரசு சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணிவரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடுவோர் தங்களது ஆதார் அடையாள அட்டை உடன் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு