பெரணம்பாக்கம் ஊராட்சியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பெரணம்பாக்கம் ஊராட்சியில் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த பெரணம்பாக்கம் ஊராட்சியில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு தலைமை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சிசுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஒன்றியக் குழுத் தலைவர் ராணி அர்ஜுனன் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

மேலும் 900 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.இந்த முகாமில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் , ஊராட்சி செயலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai based agriculture in india