கள்ளச்சாராய விற்பனை செய்த இருவர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது

திருவண்ணாமலை மாவட்டம், போளூர், மாட்டுப்பட்டி தெருவை சேர்ந்த ருக்மணி என்பவரை கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக போளூர் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி கைது செய்து சிறையில் அடைத்தார்.
மேலும்,திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதுப்பாளையம் அஞ்சல், வீரணந்தல் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சந்தோஷ்ராஜ் என்பவர் வீரணந்தல் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக செங்கம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் மலர் கைது செய்து சிறையில் அடைத்தார்.
மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் முருகேஷ், ருக்மணி மற்றும் சந்தோஷ்ராஜை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu