யூரியா தட்டுப்பாட்டை தடுக்க முத்தரப்பு ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள்.
போளூர், கலசப்பாக்கம், ஜவ்வாது மலை ஒன்றியங்களில் யூரியா உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தொய்வு குறித்து விவாதிப்பதற்காக விவசாயிகள், உர விற்பனையாளர்கள், அதிகாரிகள் பங்கேற்ற முத்தரப்பு ஆலோசனை கூட்டம் வசூர் ஊராட்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் வடமலை தலைமை வகித்தார்.
இதில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசும் போது திருவண்ணாமலை மாவட்டம் நெல் பயிர் சாகுபடியில் மூன்றாம் இடத்தில் உள்ளது. விவசாயிகளுக்கு தாராளமாக வழங்க வேண்டிய யூரியா விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் உரம் வாங்கும் விவசாயிகளுக்கு கூடுதல் பொருள்கள் மற்றும் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக அளவு வைத்து விற்பனை செய்கின்றனர் இதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்றார்.
மாவட்ட விவசாய சங்க தலைவர் கோவிந்தசாமி பேசுகையில், நெல் உற்பத்தி அதிக அளவு உள்ளதால் ஆண்டு முழுவதும் அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் , உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர் என்றார்.
தொடர்ந்து பேசிய உர விற்பனையாளர்கள் சங்க பிரதிநிதி ராஜா, உர உற்பத்தியாளர்கள் மொத்த விற்பனையாளர்கள் கூடுதல் பொருள்களை கொடுப்பதால் நாங்கள் விவசாயிகளுக்கு தருகிறோம், எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்
இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வடமலை கூறும் போது, மாவட்ட நிர்வாகத்திடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து விவசாயிகளுக்கு உரம் கட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் சபிதா, பழனி, துணை வேளாண்மை அலுவலர் ராமு, மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள், விவசாயிகள், உர விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu