/* */

வீட்டுமனை பட்டா கேட்டு பழங்குடியினர் சமூகத்தினர் போராட்டம்

சேத்துப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு பழங்குடியின சமூகத்தினர் வீட்டுமனை பட்டா கேட்டு திடீர் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

வீட்டுமனை பட்டா கேட்டு  பழங்குடியினர் சமூகத்தினர் போராட்டம்
X

தாலுகா அலுவலகம் முன்பு பழங்குடியின சமூகத்தினர் வீட்டுமனை பட்டா கேட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

சேத்துப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு பழங்குடியின சமூகத்தினர் வீட்டுமனை பட்டா கேட்டு திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு எஸ்.சி, எஸ்.டி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை தரையில் வைத்து, தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர்.

வட்டாட்சியர் கோவிந்தராஜ் அங்கு வந்து, எஸ்.சி,,எஸ்.டி. , ஒருங்கிணைப்பாளர் ரவியை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். நீங்கள் ஏற்கனவே வசித்த ஈச்சாந்தாங்கல் இடத்தை விட தற்போது இடையான்குளத்தூரில் புதிதாக வீட்டுமனை பட்டா வழங்க தயார் நிலையில் உள்ளது. இன்னும் 20 நாளுக்குள் உங்கள் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்படும், என தெரிவித்தார்.

இதையடுத்து பழங்குடியின சமூகத்தினர் அனைவரும் கலைந்து சென்றனர். 2 மணி நேரம் நடந்த தர்ணா போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 March 2022 6:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.