திருவண்ணாமலை மாவட்டத்தில் பயறு வகை சாகுபடி பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பயறு வகை சாகுபடி பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி
X

பயறு வகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்  நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டத்தில் பயிறு வகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டத்தில் பயிறு வகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் பயிறு திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் பச்சைப் பயறு, காராமணி ,மொச்சை ,உளுந்து என பல்வேறு பயறு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

உதவி வேளாண்மை அலுவலர் முருகன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சார்பில் வழங்கப்படும் மானிய திட்டம் ,உயிர் உரம் கொண்டு விதை நேர்த்தி செய்தல், மேலும் பூ பூக்கும் காலத்தில் 2 சதவீத டிஏபி கரைசல் தெளித்தல் மற்றும் மகசூலை பெருக்குதல் குறித்து பயிற்சி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் ஏழுமலை, அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் ,கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் , பயறு வகை சாகுபடி செய்யும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future