திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி
X

போளூர் சிறப்புநிலை பேரூராட்சியில் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி  நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறப்புநிலை பேரூராட்சியில் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறப்புநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்காக 29 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அல்லி நகர் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 12 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிக்க தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் ஆரணி கோட்டாட்சியர் தேர்தல் மேற்பார்வையாளருமான கவிதா கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் முகமது, தலைமை எழுத்தர் இஷாக் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture