ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்

ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்
X

குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி முகாமை தொடங்கி வைத்த ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெருமாள்

போளூரில் 3 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம், போளூர், சேத்துப்பட்டு, ஜவ்வாதுமலை ஆகிய 3 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இன்று தொடங்கியது.

ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெருமாள் தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். ஆணையாளர் பரணிதரன், வட்டார வளர்ச்சி அதிகாரி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் அருள் வரவேற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் கடமைகள், பொறுப்புகள், நிதி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை, பயிற்சியாளர்கள் அண்ணாமலை, சேகர் ஆகியோர் அளித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business