தரைப்பாலங்கள் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு
தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், நடந்தே செல்லும் மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதிகளில் அதிக மழை பெய்து வருகிறது. ஜவ்வாது மலை அடிவாரத்தில் மஞ்சளாறு மழைக்காலத்தில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தில் என உற்பத்தியாகி சுமார் 20 கிலோமீட்டர் தூரம் சென்று பெரிய ஏரியை சென்றடைகிறது.
இந்த ஆறு வளைந்து செல்லும் நான்கு இடங்களில் வனத்துறை சார்பில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இந்த நான்கு தரை பாலங்களும் சேதமடைந்துள்ளன. இதனால் பயிர்கொள்ளை, தும்பக் காடு, மேலத்தெரு போன்ற 6 கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பகுதி மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மெயின் ரோடுக்கு வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்போது துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு வனத்துறை, தீயணைப்பு துறை ,வருவாய்த் துறையினர் மூலம் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றது.
மழை தற்போது நின்றவுடன் இரண்டு நாட்கள் மலையிலேயே தங்கி தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க சட்டமன்ற உறுப்பினர் உத்தரவிட்டுள்ளார். ஜமுனாமரத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ,ஒன்றிய செயலாளர் ,ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர்கள் அப்பகுதியில் முகாமிட்டு நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu