ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வியாபாரிகள் பொதுமக்கள் போராட்டம்

ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வியாபாரிகள் பொதுமக்கள் போராட்டம்
X

பைபாஸ் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

போளூரில் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வியாபாரிகள் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

போளூரில் ரயில்வே மேம்பாலம் கட்டினார்கள் கட்டுகிறார்கள் கட்டுவார்கள் என மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் போளூர் பைபாஸ் சாலையில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. அதனை தடுக்க கோரியும் பணிகளை விரைந்து முடிக்க கோரியும் வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுநல சங்கங்கள் இணைந்து கடையடைப்பு மற்றும் போராட்டங்கள் நடத்தினர். இதனால் போளூரில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வருட கணக்கில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணியை விரைவில் முடிக்க கோரியும் போளூர் பைபாஸ் சாலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் விபத்துகளை தடுக்க கோரியும் போளூர் வியாபாரிகள் சங்கம் மற்றும் பொது மக்கள் மற்றும் பொதுநல சங்கங்கள் இணைந்து கடையடைப்பு மற்றும் மாபெரும் போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ரயில்வே மேம்பாலம் 2012 ஆம் ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு பூமி பூஜையுடன் ரயில்வே மேம்பால பணிகள் தொடங்கப்பட்டது.

தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை தொடர்கதையாக மேம்பால பணிகள் நடந்து கொண்டே வருகிறது.

ரயில்வே கேட் இருக்கு அந்தப் பக்கம் உள்ள கிராம மக்கள் நகருக்குள் வருவதற்கு சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக மேம்பால பணிகளை விரைவில் முடிக்க வலியுறுத்தியும் கடந்த 10 மாத காலமாக திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் வெளி மாநில பக்தர்கள் வருகையை ஒட்டி வேலூர் திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து அதிகமான காரணத்தால் போளூர் பைபாஸ் சாலையில் கடந்த இரண்டு மாதமாக தொடர் விபத்துக்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.

இதனால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது சமீபத்தில் போளுரை சேர்ந்த தந்தை மகன் இருவருமே சாலை விபத்தில் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது எனவே இந்த பைபாஸ் சாலையில் நடைபெறும் தொடர் விபத்துகளை தடுக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் போளூரில் அரசு மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவு போலுரை அடுத்த அத்திமூர் சாலையில் இருப்பதால் விபத்தில் பாதிப்படைந்தவர்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்வதற்கு மிகவும் காலதாமதம் ஆகிறது இதனால் விபத்துகளில் பாதிக்கப்படுபவர்கள் நகரில் உள்ள புற நோயாளிகள் பிரிவில் மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தப்பட்டது இதையொட்டி போரூர் அனைத்து வணிகர்கள் சங்கம் மற்றும் பொதுநல சங்கங்கள் போளூர் மக்கள் இணைந்து போளூர் தாலுக்கா அனைத்து வணிகர் சங்கத் தலைவர் சண்முகம் தலைமையில் போளூர் நகரத்திலிருந்து ஊர்வலமாக பைபாஸ் சாலை சந்திப்பு வரை சென்று அங்கு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இந்த போராட்டத்தில் பங்கேற்று தனது கருத்துரையை வழங்கினார் . வணிகர்கள் சங்க திருவண்ணாமலை மாவட்ட தலைவர் மனு லிங்கம் செயலாளர் ராஜசேகரன் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள், ரெட் கிராஸ் அரிமா சங்கம் ரோட்டரி சங்கம் உள்ளிட்ட சேவை சங்கங்கள் பொதுநல சங்கங்க உறுப்பினர்கள், திமுக, அதிமுக ,பாஜக, பாமக உள்ளிட்ட கட்சியினரும் கலந்து கொண்டனர். போளூர் பொதுமக்கள் கிராம மக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டத்தின் காரணமாக போளூர் நகர் முழுவதும் 100 சதவீத கடை அடைப்பு நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!