போளூர் அருகே பெண் பக்தர்கள் மீது டிராக்டர் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

போளூர் அருகே பெண் பக்தர்கள் மீது டிராக்டர் மோதல்; ஒருவர் உயிரிழப்பு
X

களியம் கிராமத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் பக்தா்கள் மீது டிராக்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். (மாதிரி படம்)

போளூர் அருகே சாலையில் நடந்து சென்ற பக்தர்கள் மீது டிராக்டர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

போளூரை அடுத்த களியம் கிராமத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் பக்தா்கள் மீது டிராக்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 4 போ் பலத்த காயமடைந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த களியம் கிராமம் காலனிப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், அதே கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டுவிட்டு நடந்தபடி பட்டாசு வெடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்..! இனி ஆட்டத்துக்கு அளவே இல்ல!

போளூா்-ஜமுனாமரத்தூா் சாலை மேம்பாலம் வழியாக வந்தபோது, எதிரே போளூா் அல்லிநகா் நடேசன் தெருவைச் சோ்ந்த மஞ்சுநாதன் மகன் அஜீத்குமாா், ஓட்டி வந்த டிராக்டா் பக்தா்கள் மீது மோதியது.

இதில், களியம் அண்ணா நகரைச் சோ்ந்த பிரகாஷ் மனைவி செம்பருத்தி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வந்தவாசி வட்டம், விழுதம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஸ்ரீதா் மனைவி உமா, அண்ணா நகா் வெங்கடேசன் மனைவி ராஜபிரியா, மாதா கோவில் தெருவைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி சாந்தி , களியம் கிராமம் சக்திவேல் மனைவி கலைவாணி ஆகிய 4 போ் பலத்த காயமடைந்தனா்.

இவா்கள் 4 பேரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து அறிந்த காலனி பொதுமக்கள் திரண்டு வந்து டிராக்டா் ஓட்டுநா் அஜீத்குமாா், டிராக்டரில் அமா்ந்து வந்த திருசூா் கிராமத்தைச் சோ்ந்த பூபாலன் மகன் ஜீவா ஆகியோரை தாக்கினா். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

பின்னா், அவா்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அம்மன் கோவிலில் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் புதூா் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீருத்ரகோட்டீஸ்வரா் கோயில். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலை அதே பகுதியைச் சோ்ந்த மணி, தினேஷ் ஆகியோா் நிா்வாகித்து வருகின்றனா்.

இந்த நிலையில், மணி வழக்கம்போல நேற்று மாலை பூஜைகள் முடித்துக் கொண்டு கோயிலை பூட்டிச் சென்றாா்.

மறுநாள் இன்று காலை அவா் கோயிலை திறக்க வந்தபோது, கோயிலின் வெளிப்புற கேட் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. உடனே உள்ளே சென்று பாா்த்தபோது அம்மன் சந்நிதி, மூலவா் சந்நிதிகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தன.

மேலும், மூலவா் சந்நிதியில் இருந்த பீரோவில் வைத்திருந்த சுவாமியின் வஸ்திரங்கள், 1.5 பவுன் அம்மன் தாலி, சுவாமிக்கு சாற்றிய ரூபாய் நோட்டு மாலைகள், காணிக்கை பணம் ஆகியவை திருடு போயிருந்தன.

இதுகுறித்து மணி பிரம்மதேசம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் சம்பவ இடம் சென்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Next Story