அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்
அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தஹஜிம்பானு தலைமை தாங்கினார். இதில் 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
ஓய்வு பெற்றவர்களுக்கு பணம் வழங்க வேண்டும். பணியில் இருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடன் வழங்க வேண்டும்.
உடனடியாக காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவிதமான நிபந்தனையின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும்,
எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ரசீதில் உள்ளதுபோல் முழுமையாக வழங்க வேண்டும். 1993-ல் பணிக்கு வந்த பணியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தின்போது கோஷங்களை எழுப்பினர்.
இதில் நூற்றுக்கணக்கான அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தலை தடுக்க சென்ற போது சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அதனைக் கண்டித்து போளூர் தாலுகா அலுவலகமும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலர்கள் மகாலிங்கம், மயிலரசன் உள்பட 20 க்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆரணி
ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டக் கிளை தலைவர் கோபால் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வட்ட மகளிரணி செயலாளர் லோகசுந்தரி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸிஸ் மணல் கடத்தலை தடுத்தார். இதனால் அவரை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் புகுந்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அதனைக் கண்டித்தும் அவரை தாக்கியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கோஷமிட்டனர்.
இதில் துணை செயலாளர் சிவகுமார், இணை செயலாளர் ரமேஷ்குமார், போராட்டக்குழு தலைவர் விநாயகம், ஒருங்கிணைப்பாளர் சரவணன், துணை செயலாளர் புருஷோத்தமன், அமைப்பு செயலாளர்கள் இளவரசன், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu