போளூர் அருகே சிறுமிக்கு திருமணம்: போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது

போளூர் அருகே சிறுமிக்கு திருமணம்: போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது
X
போளூர் அருகே சிறுமிக்கு திருமணம் நடைபெற்ற சம்பவம் குறித்து 3 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

போளூர் அருகே உள்ள முருகாபாடி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான வாலிபருக்கும் அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து தகவலறிந்து சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாக அலுவலர் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதனடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாப்பிள்ளை, அவரது தந்தை, சிறுமியின் தந்தை ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!