தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கட்டுகளை விற்பனை செய்த 3 பேர் கைது

தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கட்டுகளை விற்பனை செய்த 3 பேர் கைது
X

போளூர் பேருந்து நிலையத்தின் அருகில்  லாட்டரி சீட்டுகளை  விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்

போளூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கட்டுகளை விற்பனை செய்த 3 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் அருகில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் பேருந்து நிலைய ஓரங்களில் மறைமுகமாக சில மர்ம நபர்கள் லாட்டரி டிக்கெட்டுகளை விற்று வந்தனர்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில் அதிவிரைவு படை காவலர்கள் இணைந்து சோதனை நடத்தினர்.

அப்போது போளூர் பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த கடையில் அசாம் மாநிலத்தைச் சார்ந்த லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மூவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள், செஞ்சி தாலுக்கா பென்னகர் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ், போளூர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த வைகுந்த், வசூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்த 4, 847 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர் கைப்பற்றப்பட்ட லாட்டரி சீட்டுகளின் மதிப்பு சுமார் 5 லட்சத்து 34 ஆயிரத்து 790 ரூபாய் ஆகும். மேலும் இவர்களிடமிருந்து ரொக்கமாக 7040 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இவர்கள் 3 பேர் மீதும் போளூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்