போளூர் அருகே நடந்த கார் விபத்தில் 3 பக்தர்கள் உயிரிழப்பு

போளூர் அருகே நடந்த கார் விபத்தில் 3 பக்தர்கள் உயிரிழப்பு

விபத்துக்குள்ளான கார்

போளூர் அருகே நடந்த கார் விபத்தில் திருவண்ணாமலை வந்த ஆந்திரா பக்தர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

போளூர் அருகே திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பக்தர்கள் மூன்று பேர் கார் விபத்தில் உயிரிழந்தனர்

ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

அந்த வகையில் இன்று சனிக்கிழமை காலை ஆந்த்ராவிலிருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வந்த கார் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூரை அடுத்த பெண்குரைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிதர், இவர், தனது உறவினர்களுடன் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று சனிக்கிழமை காலை காரில் வந்துள்ளார்,

காரை, சசிதர் ஓட்டி வந்துள்ளார், போளூரை அடுத்துள்ள வசூல் கிராமம் அருகே, திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் கார் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் உருக்குலைந்தது போனது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சசிதர் மனைவி கல்யாணி , அவரது மகள் ரித்திஷா மற்றும் உறவினர் ரவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும் காரை ஓட்டி வந்த சசிதர் அவரது மகன் ராமச்சந்திரன் பெங்களூருவில் வசிக்கும் துர்கா பிரசாத் மனைவி ஈஸ்வரி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்கு குறித்து தகவல் அறிந்த போளூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்டுப் பணியில் ஈடுபட்டனர்

இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை நீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் விபத்திற்குள்ளான கார் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read MoreRead Less
Next Story