போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட கிரைம் செய்திகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கீழ்கரிக்காத்தூா் கிராமத்தைச் சோந்தவருடைய 24 வயது மகன் இவா், பெங்களூருவில் தனியாா் வங்கியில் பணியாற்றி வருகிறாா்.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் கீழ்கரிக்காத்தூா் கிராமத்துக்கு வந்த இவர், தன் தாய் சமையல் உதவியாளராகப் பணியாற்றி வரும் பள்ளிக்கு அடிக்கடி சென்று வந்தாராம்.
அப்போது, அந்தப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு, மாணவியை அவா் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டாராம்.
மேலும், இதுகுறித்து யாருக்கும் தெரிவிக்கக்கூடாது எனவும் மாணவியை மிரட்டியதாகத் தெரிகிறது. அதனால், மாணவி நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளாா்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு மாணவிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் மாணவியை பெற்றோா் அருகில் உள்ள கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது மாணவி கா்ப்பம் அடைந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போளூர் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து அந்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற , முதியவா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்
திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் ஆா்.குணசேகரன் தலைமையிலான போலீசார் நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, காந்தி நகா் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த வேடியப்பன் கோவில் தெருவைச் சோந்த லோகநாதன் , வேட்டவலம் சாலை, பிள்ளையாா் கோயில் அருகே லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தைச் சோந்த ஏழுமலை ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து ரூ.1,000 மதிப்பிலான 20 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu