/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐம்பொன் சிலை கடத்தல் உள்ளிட்ட கிரைம் செய்திகள்

Crime News in Tamil -மோட்டார் சைக்கிளில் 7 ஐம்பொன் சிலைகள் கடத்தி சென்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐம்பொன் சிலை கடத்தல் உள்ளிட்ட கிரைம் செய்திகள்
X

Crime News in Tamil -திருவண்ணாமலை அடுத்த வாணாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் போலீசார் நூக்கம்பாடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர்களிடம் விலை உயர்ந்த 7 ஐம்பொன் சிலைகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களை வாணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தானிப்பாடி அருகே உள்ள ஒரு கோவிலில் 10 ஐம்பொன் சிலைகள் திருட்டு போய் இருந்தது. அந்த கோவிலில் இருந்த சிலையை இவர்கள் திருடினார்களா? அல்லது வேறு எங்காவது திருடி வந்தார்களா? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏற்கனவே தானிப்பாடி போலீஸ் நிலையத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிலைகள் திருட்டு போனது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் சிலை கடத்தி வந்த 2 பேரை தானிப்பாடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அருகில் உள்ள பெருங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி , இவரது மனைவி அம்சா இவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

தண்டபாணி குடும்பத்துடன் வீட்டின் கதவை உட்புறமாக சாத்திக்கொண்டு மாடியில் படுத்து தூங்கியுள்ளனர். நேற்று காலை கீழே இறங்கி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டிலிருந்த பொருட்களும் சிதறி கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகைகள் மற்றும் ஹாலில் இருந்த எல்.இ.டி. டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதே போல அதே தெருவை சேர்ந்த சக்கரபாணி என்பவரது வீட்டின் பூட்டையும் உடைத்து வீட்டில் இருந்த ஒரு பவுன் நகை, எல்.இ.டி டிவி ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். மேலும் கருணாகரன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்தும் அவரது வீட்டில் இருந்து ரூ.6 ஆயிரம் மற்றும் எல்.இ.டி. டிவி ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். 3 வீடுகளில் ஒரே இரவில் அடுத்தடுத்து கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

இந்த திருட்டு சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட 3 பேரும் தனித்தனியே தானிப்பாடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் தனிப்படை அமைத்து போலீசர் கொள்ள கும்பலை தேடி வருகின்றனர்.

கொலை

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு போளூர் சாலையில் பாத்திரக்கடை மற்றும் அடகு கடை நடத்தி வந்தவர் ராஜகோபால். இவரிடம் வெங்கடாஜலபதி தெருவை சேர்ந்த மூர்த்தி என்பவர் செல்போன் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். இந்த நிலையில் செல்போனை மீட்பதற்காக மூர்த்தி கடைக்கு சென்று, வட்டியும் அசலும் எவ்வளவு ஆகிறது என்று கேட்டுள்ளார். அதற்கு ராஜகோபால் செல்போனுக்கு ரசீது எங்கே என்று கேட்டார். அதற்கு அவர் ரசீது இல்லை என்று கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி ராஜகோபாலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜகோபால் சிகிச்சைக்காக சேத்துப்பட்டு உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி கொலை வழக்காக மாற்றம் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 7 Oct 2022 11:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?