திருவண்ணாமலை: மின்வாரியத்தில் இணைப்பு பெற விவசாயிகளுக்கு அழைப்பு

திருவண்ணாமலை: மின்வாரியத்தில் இணைப்பு பெற விவசாயிகளுக்கு அழைப்பு
X
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் மின்வாரியத்தில் இணைப்பு பெற விவசாயிகளுக்கு அழைப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்கள் மின் வாரிய அதிகாரிகளை சந்தித்து மின் இணைப்பு பெற்று கொள்ளலாம்.

கடந்த 1.4.2006 முதல் 31.3.13 வரை சாதாரண வரிசையில் விவசாய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் செயற்பொறியாளர் தொடர்புகொண்டு 30 நாள் அறிவிப்பு கடிதம் பெற்று தேவையான ஆவணங்களை அவர்கள் சார்ந்த பிரிவு அலுவலக அலுவலரிடம் சமர்ப்பித்து மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்.

சுயநிதி திட்டம் ரூபாய் 10,000 திட்டத்தின்கீழ் 1.4.13 முதல் 31.3.14 வரை விண்ணப்பம் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மின் இணைப்பு பெறுவதற்கு ரூபாய் 500 முன் மதிப்பீட்டுத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்.

சுய நிதி திட்டம் ரூபாய் 25 ஆயிரம் அல்லது 50 ஆயிரம் திட்டத்தின்கீழ் விவசாய மின் இணைப்பு பெற 1.4.14 முதல் 31.3.18 வரை விண்ணப்பம் செய்து பெறுவதற்கு ரூபாய் 500 முன் மதிப்பீட்டுத் தொகை செலுத்தி உள்ள விண்ணப்பதாரர்கள் மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்.

மேற்கண்ட ஆண்டுகளில் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் சேத்துப்பட்டு செயற்பொறியாளர் அவர்களை அணுகி பயன்பெறுமாறு தனது அறிக்கையில் செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்