சாலை விரிவாக்க பணிகளை திருவண்ணாமலை உதவி கோட்ட பொறியாளர் ஆய்வு

சாலை விரிவாக்க பணிகளை திருவண்ணாமலை உதவி கோட்ட பொறியாளர் ஆய்வு
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை விரிவாக்க பணியினை கோட்ட உதவி பொறியாளர் ஆய்வு செய்தார்.

சாலை விரிவாக்க பணிகளை திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளுரை அடுத்த வடமாதிமங்கலம் சாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியினை நெடுஞ்சாலை துறை கோட்ட உதவி பொறியாளர் கோவிந்தசாமி ஆய்வு செய்தார்.

வடமாதிமங்கலம் , தேப்பநந்தல் வரை தார் சாலை அமைந்துள்ளது . இந்த சாலையில் 3.3. கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ. 3 கோடியே 90 லட்சத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணியை கோட்ட பொறியாளர் முரளி உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறியாளர் கோவிந்தசாமி பார்வையிட்டு ஜல்லி கலவை மற்றும் சாலையின் தரம் குறித்து கருவி மூலம் ஆய்வு செய்தார்.

அப்போது நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள் உடன் இருந்தனர்

Tags

Next Story
ai solutions for small business