உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் காலமானார்..!

உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் காலமானார்..!
X

ஏ பி ஆர் ஓ ஆசைத்தம்பி

திருவண்ணாமலை மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் காலமானார்

திருவண்ணாமலை மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த ஆசைத்தம்பி உடல் நலக்குறைவால் காலமானார்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் சேர்ந்தவர் ஆசை தம்பி. இவர் திருவண்ணாமலை மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்தார். கடந்த எட்டாம் தேதி மதியம் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஏ.பி.ஆர்ஓ ஆசைத்தம்பி திடீரென மயக்கம் அடைந்து சாய்ந்துள்ளார்.

அப்போது அலுவலகத்தில் இருந்தவர்கள் ஆசை தம்பியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றனர் பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் பெங்களூரில் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து ஏபிஆர்ஓ ஆசைத்தம்பி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த ஏ பி ஆர் ஓ ஆசைதம்பிக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

ஏ பி ஆர் ஓ ஆசைதம்பி மறைவிற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து செய்தியாளர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலர்கள், பிஆர்ஓ அலுவலக அலுவலர்கள், தங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து ஆசை தம்பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!