சேத்துப்பட்டு பகுதியில் போலீசார் அதிரடி வாகன சோதனை
தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர்
சேத்துப்பட்டில் திருட்டு, வழிபறி கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தீவிர வாகன சோதனை சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் திருட்டு கொள்ளை வழிப்பறி போன்ற குற்றங்கள் தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவுப்படி சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆரணி சாலை, வந்தவாசி சாலை, போளூர் சாலை, செஞ்சி சாலை, தேவிகாபுரம் நெடுங்குணம் மற்றும் எல்லை பகுதிகளில் போலீசார் பல பிரிவாக சென்று இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம், ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கும் ஒரே வாகனத்தில் மூன்று பேர் அதற்கு மேற்பட்ட குடும்பத்தினருடன் வருபவர்களுக்கு உயிரின் மதிப்பை தெரியப்படுத்தும் வகையில் சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் முரளிதரன் விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார். மேலும் கொள்ளை சம்பவம், வழிபறி திருட்டு உள்பட பல்வேறு குற்றங்கள் நடைபெறாமல் இருக்க வாகன சோதனை நடைபெற்றது.
போலீசாரின் துருவி துருவி நடத்தும் விசாரணையில் இப்பகுதியில் செல்லும் மக்கள் விழி பிதுங்கி நின்றனர். வாகன ஓட்டிகள் வாகனத்திற்கு தேவையான அனைத்து சான்றுகளையும் உடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி அவர்களை வழி அனுப்பி வைத்தார்.
மேலும் இருசக்கர வாகனங்களில் நம்பர் பிளேட் இல்லாமல் வந்தவர்கள், காா்களில் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்கள், இருசக்கர வாகனங்களில் 3 நபர்களாக பயணம் செய்தவர்கள், மதுபோதையில் வாகனங்களை ஓட்டி வந்தர்கள், ஆட்டோவில் டிரைவர் சீட் அருகில் ஆட்களை அமர வைத்து வந்த வாகனங்களையும் போலீசார் மடக்கி பிடித்து ஆவணங்களை சரி பார்த்து அபராதம் விதித்தனர்.
வாகன சோதனையின் போது சப் இன்ஸ்பெக்டர் நாராயணன், மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu