ஊராட்சி செயலர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை காெள்ளை

ஊராட்சி செயலர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை காெள்ளை
X

பைல்படம்.

பெரணமல்லூர் அருகே ஊராட்சி செயலர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடி சென்றனர்.

சேத்துப்பட்டு அடுத்த பெரணமல்லூர் அருகே உள்ள கட்டமங்கலம், கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணமூர்த்தி, (வயது 45). இவர் பெரணமல்லூர் ஒன்றியம் செப்டாங்குளம், ஊராட்சி செயலாளராக உள்ளார்.

இவரது மனைவி அபிராமி, கணவன் மனைவி இருவரும் நேற்று வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்றனர். இன்று மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோஉடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.10 ஆயிரம், திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து பெரணமலலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!