புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் போராட்டம்

புகார் மனு  மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் போராட்டம்
X

புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட  ஊராட்சி மன்ற தலைவர்.

Protest News -புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஊராட்சி மன்ற தலைவர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

Protest News - திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆக இருப்பவர் வெங்கடேசன். ஊராட்சி மன்ற துணைத் தலைவராக சித்தார்த்தன் இருந்து வருகிறார்.

இந்த இருவர்களுக்கு இடையே பதவியேற்ற நாளிலிருந்து ஒருவர் ஒருவர் ஒத்துழைப்பு இன்றி செயல்பட்டு வருவதாக தெரிகிறது.

மேலும் அம்மாபாளையம் ஊருக்கு செல்லும் வழியில் ரயில்வே கிராசிங் சுரங்க பாதையில் தண்ணீர் அகற்றும் பணி பல மாதங்களாக நடைபெறவில்லை.

இதனால் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

கடந்த முறை மழை பெய்த போது சுரங்க பாதையில் தேங்கி இருந்த தண்ணீரை துணைத்தலைவர் சித்தார்த்தன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனி மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மின் சாதனத்தை நிறுத்தி பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்து தண்ணீரை வெளியேற்ற முயற்சி செய்தார்.

இதனால் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்குள் மீண்டும் பிரச்சனை எழுந்தது.

ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மின்சாரம் மூலம் துணைத்தலைவர் தன்னை கொல்ல முயற்சி செய்வதாக கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

இந்த மனுவை போலீசார் முறைப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் குற்றம் சாட்டினார்.

தனது மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் அவரது ஆதரவாளர்களுடன் இரவு கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது திடீரென தர்மாவில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர் இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா மற்றும் போலீசார் அவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் நேரில் வந்து போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினார்.

ஆனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியிலேயே மீண்டும் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் போராட்டம் நடத்தினார்கள். இதனால் நள்ளிரவுக்கு பிறகும் போராட்டம் நீடித்தது.

பின்னர் போலீசார் இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் நள்ளிரவு கலைந்து சென்றனர்.

ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு நிலவையில் உள்ளது என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

போலீஸ் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தனது ஆதவராளுடன் தர்ணாவில் ஈடுபட்டு தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Weight Loss Tips In Tamil