திருவண்ணாமலை; படியில் பயணம் செய்த மாணவர்கள் பேருந்து நிறுத்திய ஓட்டுனர்

திருவண்ணாமலை; படியில் பயணம் செய்த மாணவர்கள் பேருந்து நிறுத்திய ஓட்டுனர்
X

படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்ததால், பாதியில் நிறுத்தப்பட்ட பேருந்து

திருவண்ணாமலையில், படியில் பயணம் செய்த மாணவர்களால் கோபமடைந்த ஓட்டுனர், பாதி வழியில் பேருந்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் படியில் பயணம் செய்த மாணவர்களால் கோபமடைந்து பாதி வழியில் பேருந்தை ஓட்டுனர் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினம் தோறும் பயணம் செய்து வருகின்றனர்.

இநிலையில் வழக்கம் போல் நேற்று மாலை பிரிவு பிசிப்ட் வகுப்புகளுக்கு செல்லும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போளூர் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி செல்லும் அரசு பேருந்து மூலம் செல்வது வழக்கம்.

அவ்வாறு நேற்று மாலை திருவண்ணாமலைக்கு அரசு பேருந்தில் புறப்பட்ட மாணவர்கள் ஒரு சிலர் படியில் நின்றபடி பயணம் செய்து வந்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மற்றும் பயணிகள் பலமுறை உள்ளே வரும்படி அந்த மாணவர்களை கூறியும் அதனை மாணவர்கள் பொருட்படுத்தாமல் பேருந்தின் படியில் நின்றபடி பயணித்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் கோபமுற்ற ஓட்டுநர் பேருந்தை பாதி வழியில் நிறுத்திவிட்டு போக்குவரத்து பணிமனையில் உள்ள தங்களது அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவித்தனர்.

பணிமனையில் இருந்து போக்குவரத்து அலுவலர்கள் வந்து கூறியும் கேட்காத மாணவர்கள் பிறகு பேருந்து எடுக்கப்படாது என அதிகாரிகள் கண்டிப்புடன் கூறிய பிறகு உள்ளே சென்றனர்.

இது தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது;

மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது என்பது தவறுதான் .ஆனால் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினந்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இருந்த போதிலும் கல்லூரி நேரத்தில் போதிய அரசு பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் இவ்வாறு ஒரே பேருந்தில் கூட்டம் கூட்டமாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை போக்க கல்லூரி நேரத்தில் அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதனை போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்க்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!