பரோட்டா போட்டு கொடுத்து அசத்திய திமுக வேட்பாளர்
பரோட்டா போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் தரணி வேந்தன்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் பகுதியில் பரோட்டா ஆம்லெட் போட்டு கொடுத்து வித்தியாசமான முறையில் திமுக வேட்பாளரும் தரணிவேந்தன் வாக்கு சேகரித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் பகுதியில் ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தரணி வேந்தன், மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமையில், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கினை சேகரித்து நகரின் முக்கிய பகுதிகளான பஜார் வீதி, பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் ,அண்ணா சிலை பகுதி, வீரப்பன் தெரு உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்.
அங்கு வேட்பாளர் தரணி வேந்தனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பரோட்டா மாஸ்டராக
இந்நிலையில் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் திடீரென பரோட்டா மற்றும் ஆம்லெட் செய்து பொதுமக்களிடம் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்.
வேட்பாளர் பரோட்டா மற்றும் ஆம்லெட் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எவரெஸ்ட் நரேஷ் குமார், நகர செயலாளர் தனசேகர் ,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் மணிகண்டன், நகர மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் ஆலகிராமம், மயிலம், பாதிர புலியூர், அவ்வையார் குப்பம் ,உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.
அப்போது மயிலம் தொகுதியில் வருகை தந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களுக்கு அப்பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பழங்குடியினர் பாரம்பரிய இசைவாசித்து நடனம் ஆடினர். அப்போது அங்கு சென்ற அமைச்சர் அவர்களது இசைக்கருவியை அவர்களுக்கு இணையாக வாசித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரி நூதன முறையில் வாக்கு சேகரித்தார். இதனால் பழங்குடியினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
இந்நிகழ்வில் தெற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சேது நாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி, தலைமை தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, ஒன்றிய பெருந்தலைவர்கள் , மயிலம் வடக்கு ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர்கள் ,ஊராட்சி மன்ற தலைவர்கள் ,அணி அமைப்பாளர்கள் ,மாவட்ட பிரதிநிதிகள் ,திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu