திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை சார்பில் காசநோய் விழிப்புணர்வு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை சார்பில் காசநோய் விழிப்புணர்வு முகாம்
X

மாணவ மாணவிகளுக்கு காச நோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய ஆசிரியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள்

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை சார்பில் காசநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

சேத்துப்பட்டு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் பெரணமல்லூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றுது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் ஆறுமுகம், குணசேகரன், அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மேற்பார்வையாளர் ராஜா வரவேற்றார்.

முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 வீல் சேர், ஒரு நடை வண்டியும், 54 பேருக்கு அடையாள அட்டை, 170 பேருக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் கண், காது, எலும்பு முறிவு, குழந்தை நலம், தசை பயிற்சி , மனநலம், உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர்.

இதில் ஆசிரியர் பயிற்றுனர்கள் இசையருவி, சரவணகுமார், மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சுகந்தி நன்றி கூறினார்.

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலத்தில் தனியார் பள்ளியில் சுகாதார துறை சார்பில் திருத்தியமைக்கப்பட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குனர் அசோக் ஆலோசனைப்படி, காசநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுது.

இந்த முகாமிற்கு கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நரேந்திரன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் வேலாயுதம், ராஜேஷ், உதவி தலைமையாசிரியர் ரவி முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் முருகன் வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்ட காசநோய் நலக்கல்வியாளர் சேஷாத்திரி கலந்து கொண்டு பேசுகையில்,

காசநோயின் அறிகுறிகள், அதற்கான பாதுகாப்பு, சிகிச்சை முறைகள், குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் மாணவிகளுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் சிசிச்சை மேற்பார்வையாளர் தினேஷ், களப்பணியாளர் மோகன்பாபு, ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!