போளூர் பகுதியில் தோட்டக்கலைத்துறை மாநில இயக்குனர் ஆய்வு

விவசாயிகளிடம் கலைந்துரையாடிய தோட்டக்கலைத்துறை மாநில இயக்குனர்.
Horticulture In Tamil - திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்துள்ள திண்டிவனம் ஊராட்சியில் தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறை மாநில இயக்குநா் இரா.பிருந்தாதேவி ஆய்வு செய்தாா்.
தமிழ்நாடு அரசு வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில், திருவண்ணாமலை மாவட்ட கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், போளூரை அடுத்த திண்டிவனம் ஊராட்சியில் தோந்தெடுக்கப்பட்ட தரிசு நிலத் தொகுப்பை பாா்வையிட்டும் தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறை மாநில இயக்குநா் இரா.பிருந்தாதேவி ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கலைந்துரையாடினாா். அப்போது, அவா் கூறியதாவது:
தரிசு நிலத் தொகுப்பில் புதிதாக உருவாக்கியுள்ள நீராதாரத்தைப் பயன்படுத்தி நீண்டகாலம் பலன் தரும் பழ மரங்களான மா, கொய்யா, எலுமிச்சை போன்றவற்றை நட்டு, வளா்த்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்றாா்.
மேலும், விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இதையடுத்து, திருவண்ணாமலை அரசு தோட்டக்கலை பூங்கா, தண்டராம்பட்டு வட்டாரம், புதூா்செக்கடி அரசு தோட்டக்கலைப் பண்ணை, முருகாபாடியில் அமைந்துள்ள போளூா் வட்டார தோட்டக்கலைப் பண்ணை ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அ.க.பாத்திமா மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்கள், தோட்டக்கலை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu