நான்கு வழிச்சாலை திட்டங்கள் கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
நான்கு வழிச்சாலையை களஆய்வு மேற்கொண்ட கண்காணிப்புப் பொறியாளா்
திருவண்ணாமலை மாவட்டம் எட்டிவாடி-ஆரணி நான்கு வழிச்சாலையை நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் கண்காணிப்புப் பொறியாளா் செந்தில் களஆய்வு மேற்கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்துக்குள்பட்ட போளூா் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் எட்டிவாடி முதல் ஆரணி வரை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளைப் பார்வையிட்ட சென்னை நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் செந்தில், சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு நெடுஞ்சாலை துறை திட்ட கோட்ட பொறியாளர் நாராயணன், திருவண்ணாமலை கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலை துறை ராஜ்குமார் , மதுராந்தகம் நெடுஞ்சாலை துறை திட்டங்கள் உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தராஜ், போளூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு, திருவண்ணாமலை தர கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் இன்ப நாதன், மதுராந்தகம் நெடுஞ்சாலை துறை திட்டங்கள் உதவி பொறியாளர் அரவிந்த், மதுராந்தகம் பிரிவு நெடுஞ்சாலை துறை திட்டங்கள் உதவி பொறியாளர் பத்மா, கலசப்பாக்கம் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் வெங்கடேசன், திருவண்ணாமலை தர கட்டுப்பாடு உதவி பொறியாளர் அஜய் குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பொறியாளர்கள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து வந்தவாசி உள்கோட்ட நெடுஞ்சாலைத்துறைக்குள்பட்ட வந்தவாசி-கீழ்சாத்தமங்கலம் சாலையில் ரூ.1.64 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை கண்காணிப்புப் பொறியாளா் செந்தில் ஆய்வு செய்தாா். அப்போது, பாலத்தின் அளவுகள், அதன் உறுதித் தன்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, கோட்ட பொறியாளா்கள் ராஜகணபதி, உதவிக் கோட்ட பொறியாளா்கள் தியாகராஜன், கோவிந்தராஜன், உதவி பொறியாளா்கள் வெங்கடேஷ், லோகராஜா, அரவிந்தன் மற்றும் சாலை ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu