ஆபத்தை உணராமல் படியில் தொங்கிச் செல்லும் மாணவர்கள்!

ஆபத்தை உணராமல் படியில் தொங்கிச் செல்லும் மாணவர்கள்!
X

பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள்

ஆபத்தை உணராமல் படியில் தொங்கிச் செல்லும் மாணவர்கள், பெற்றோர்கள் தான் அறிவுறுத்த வேண்டும் போக்குவரத்து அதிகாரிகள் கோரிக்கை

திருவண்ணாமலை: கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி செய்யும் ஆபத்தான பயணம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் அருகில் உள்ள நகரங்களான திருவண்ணாமலை, வேலூர், செய்யாறு, ஆரணி போன்ற இடங்களுக்கு சென்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை நோக்கி சென்ற ஒரு அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் அதிக அளவில் படியில் தொங்கியபடி பயணம் செய்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

போக்குவரத்து பணியாளர்களின் வேதனை:

இது குறித்து திருவண்ணாமலை பணிமனை போக்குவரத்து பணியாளர்களிடம் கேட்டபோது, "நாங்கள் கல்லூரி நேரங்களில் கூடுதலாகவே அரசு பேருந்துகளை இயக்கி வருகிறோம். ஆனால் மாணவர்கள் ஒரு சில குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டுமே அதிக அளவில் பயணம் செய்ய விரும்புகின்றனர். மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உள்ளிட்ட போக்குவரத்து பணியாளர்கள் பலமுறை கூறியும், மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்கின்றனர்.

அதனை தொடர்ந்து நாங்கள் கண்டித்து கேட்டால், மாணவர்கள் தங்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். எனவே, மாணவர்களிடம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உரிய அறிவுரை வழங்கி, மாணவர்களை பேருந்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும்படியும், கூட்டம் அதிகம் இருந்தால் அடுத்து வரும் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் எனவும், பேருந்தில் பயணம் செய்யும் போது நடத்துனர் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் சென்று வர வேண்டும் எனவும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தனர்.

காவல்துறையின் அறிவுரை:

மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை எண்ணி, பேருந்தில் பயணம் செய்யும் போது ஒழுக்கமாகவும், ஆபத்தை விளைவிக்கக்கூடிய சாகசங்களை செய்யாமலும், சக பயணிகளுக்கு எந்த தொந்தரவுகள் இல்லாமலும் செல்ல வேண்டும் என காவல்துறை அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.

மாணவர்களின் பாதுகாப்பு:

மாணவர்கள் தங்கள் உயிரின் மதிப்பை உணர்ந்து, பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி, போக்குவரத்து விதிகளை பின்பற்றும் படி அறிவுறுத்த வேண்டும். மேலும், போக்குவரத்து துறை அதிகாரிகள், போதிய பேருந்துகளை இயக்கி, மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!