சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

சத்துணவில் பல்லி: மாணவர்கள்  மருத்துவமனையில் அனுமதி
X

மதிய உணவு உண்ணும் மாணவர்கள் (கோப்பு படம்)

சத்துணவில் பல்லி , சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நலமுடன் வீடு திரும்பினார்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கருங்காலி குப்பம் நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 19 மாணவர்கள் உண்ட சத்துணவில் பல்லி இருந்துள்ளது. சத்துணவில் பல்லி கிடந்ததை பார்த்ததும், உணவு சாப்பிட்ட 19 மாணவர்களையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் , மாணவர்கள் அனைவரும் நலமாக உள்ளதாக தெரிவித்தனர்.

மாவட்ட கல்வி அலுவலர், வட்ட கல்வி அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளியில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகிய இருவரையும் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு