இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி மாணவி படுகாயம்; கிராம மக்கள் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்
சேத்துப்பட்டு அருகே கங்கைசூடாமணி பகுதியில் தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவி காயமடைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் இரண்டரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தர்மராஜா கோவில் தெருவில் சேர்ந்தவர் முருகன் டைலர். இவருடைய மகள் அனுஷ்கா வயது 14 ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அனுஷ்கா நேற்று தன் பாட்டி வீடான கங்கை சூடாமணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வேலூரில் இருந்து பாண்டி செல்லும் தனியார் பேருந்து அனுஷ்கா மீது மோதியது. இதில் அனுஷ்கா 15 மீட்டர் தொலைவிற்கு பைக் தேய்ந்து வந்ததில் இரண்டு கால்கள் கை உள்பட பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனுஷ்காவை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் ஆரணி சேத்துப்பட்டு சாலையில் கங்கை சூடாமணி கிராம நெடுஞ்சாலையானது போக்குவரத்துக்கு பார்வை தடையாக உள்ளது. இந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது எனவே வேகத்தடை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் இரண்டரை மணி நேரம் சாலை மறியல் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போளூர் டிஎஸ்பி நல்லு, இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு. நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் தொலைபேசியில் பேசி உடனடியாக இந்த பகுதியில் வேக தடைஅமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இது குறித்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து வேகத்தடை அமைப்பதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu