திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் மாநில ஆணையர் ஆய்வு
போளூர் நகராட்சியில் கட்டப்பட உள்ள வணிக வளாகத்துக்கு இடத்தை ஆய்வு செய்தார் பேரூராட்சிகளின் மாநில ஆணையர். செல்வராஜ்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறப்புநிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணி, ஜமுனாமரத்தூர் சாலையில் பழைய சந்தை பகுதியில் ரூ. 4 கோடியில் கட்டப்பட உள்ள வணிக வளாகம், ஊரக வேலை உறுதி திட்டத்தில் கலைஞர் நகர்ப்புற வேலைவாய்ப்பு பணிகள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இப்பணியின் திட்டங்கள் குறித்து மாநில ஆணையர் போளூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது உதவி இயக்குனர் ஜு ஜாபாய், செயற்பொறியாளர் வைத்தியலிங்கம், பேரூராட்சித் தலைவர் ராணி சண்முகம், துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
பின்பு ஆரணி களம்பூர் பேரூராட்சியில் மாநிலஆணையர் செல்வராஜ் , பொது சுகாதாரப் பணிகள் ,குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேரூராட்சித் தலைவர் பழனி துணைத் தலைவர் அகமது பாஷா உட்பட பலர் இருந்தனர்.
சேத்துப்பட்டு சிறப்பு பேரூராட்சியில் புதிய பணிகளை மாநில பேரூராட்சிகளின் ஆணையர் ஆய்வு செய்தார். சேத்துப்பட்டு பஸ் நிலையத்தை பார்வையிட்ட ஆணையர் பழுதடைந்த குடிநீர் குழாயை சீர்செய்து பொது மக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறினார், மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரம் தயாரிக்கப்படும் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
துளசி ராமர் குளத்தின் சுவர்கள் சேதமடைந்து சீர் செய்வதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் ,சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் சுதா மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu