வாக்காளர் பெயர் திருத்தம் சிறப்பு முகாம்

வாக்காளர் பெயர் திருத்தம் சிறப்பு முகாம்
X

வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம் குறித்த விழிப்புணர்வு பேரணி

போளூரில் வாக்காளர் பெயர் திருத்தம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது

போளூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட போளூர் பேரூராட்சி பகுதி பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் (01.11.2021 முதல் 30.11.2021 வரை) மற்றும் சிறப்பு முகாம்கள் (13.11.2021, 14.11.2021 மற்றும் 27.11.2021, 28.11.2021) ஆகிய நாட்களில் நடைபெறுவதை முன்னிட்டு புதியதாக பெயர் சேர்த்தல் நீக்கல், திருத்தம் செய்தல் ஆகியவற்றை மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் பயன்பெற தெரிவித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் போளூர் வட்டாட்சியர், தேர்தல் துணை வட்டாட்சியர், போளூர் பேரூராட்சியின் செயல் அலுவலர், போளூர் வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள், போளூர் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்