சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்; பஸ்களை முறையாக இயக்க கவுன்சிலர்கள் கோரிக்கை

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்; பஸ்களை முறையாக இயக்க கவுன்சிலர்கள் கோரிக்கை
X

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடந்தது.

கிராமப்புறங்களுக்கு அரசு பஸ்கள் முறையாக இயக்க வேண்டும், என ஒன்றியக் குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில். ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் ராணி அர்ஜுனன், தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு துணை தலைவர் முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், இந்திராணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் அலுவலக மேலாளர் மூர்த்தி, வரவேற்றார்.

கூட்டத்தில் ஒன்றியக் குழு தலைவர் ராணி அர்ஜுனன் பேசுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் பெண்களின் வளர்ச்சிக்காக மகளிர் தினத்தில் மகளிர்க்காக உள்ளாட்சித் துறையில் பல்வேறு பதவிகளை வழங்கி அனைத்து தரப்பு மகளிருக்கும் சிறப்பான திட்டங்களை அளித்து மகளிர் மனதில் நீங்கா இடம் பெற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.

பின்னர் கூட்டத்தில் திமுக உறுப்பினர் சம்பத் பேசியதாவது,

சென்னையில் இருந்து போளூர் செல்லும் தடம் எண் 148, பஸ் கிழக்கு கூட்ரோட்டில் பயணிகளை ஏற்றி இறக்குவதில்லை. இதனால் மருத்துவம் பாடி, செவரப்பூண்டி உள்பட பல்வேறு கிராம மக்கள் கிழக்கு கூட்ரோட்டில் இருந்து தங்கள் கிராமத்திற்கு செல்ல முடியாமல் சேத்துப்பட்டு , தேவிகாபுரம் என இறங்கி அங்கிருந்து ஆட்டோ பிடித்து தங்கள் கிராமத்திற்கு செல்லும் நிலையில் உள்ளனர். இதுகுறித்து திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து அதிகாரியிடம் தகவல் தெரிவித்து அவர் உத்தரவு அளித்தும் போக்குவரத்து தொழிலாளர்கள் அலட்சியம் செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் போக்குவரத்து ஊழியர்களை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். எனவே ஒன்றிய குழு தலைவர் உடனடியாக போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் எனக் கூறினார்.

கவுன்சிலர் பிரேமலதா பேசுகையில், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊத்தூர், கிராமத்திற்கு ஆரணியில், இருந்து தேவிகாபுரம், செல்லும் தடம் எண் 8ஏ, 8பி, ஆகிய அரசு பஸ் உள்ளே வந்து சென்று வந்தது.

அந்தப் பேருந்து நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிறது, பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை, எனவே நிறுத்தப்பட்ட பேருந்தை இயக்கவும் மேலும் தேவிகாபுரம் வழியாக மன்சூரா பாத் பேரனப்பாக்கம் வழியாக பேருந்து இயக்க வேண்டும் நிறுத்தப்பட்ட சென்னை பேருந்தையும் இயக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தார் .

இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் தங்கள் கோரிக்கையை மண்டல பொது மேலாளரிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆவண செய்கிறோம் எனத் தெரிவித்தனர்.

மேலும் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் நடைபெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய உறுப்பினர்கள், பிற துறை அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?