தேவிகாபுரத்தில் 4 கடைகளில் தொடர் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தேவிகாபுரத்தில் 4 கடைகளில் தொடர் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
X

தேவிகாபுரத்தில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட மளிகை கடை.

சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் உள்ள 4 கடைகளில் திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் உள்ள போளூர் சாலையில் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள கடைகளில் வர்த்தகம் முடிந்து நேற்று இரவு பூட்டப்பட்டது.

இந்நிலையில் அரிசி கடை, மளிகை கடை, எலெக்ட்ரிக் கடை உட்பட 4 கடைகளின் ஷட்டர்களின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பது தெரியவந்தது. இதையறிந்த உரிமையாளர்கள் கடைக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது கடைகளில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும் ரூ.75 ஆயிரம் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சேத்துப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே இரவில் 4 கடைகளில் நடைபெற்றுள்ள திருட்டு சம்பவத்தால் வணிகர்கள் அச்சமடைந்துள்ளனர். சேத்துப்பட்டு மற்றும் தேவிகாபுரத்தில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture