கீழ்பென்னாத்தூா் பகுதியில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: கடைக்கு 'சீல்'

கீழ்பென்னாத்தூா் பகுதியில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: கடைக்கு சீல்
X

புகையிலை பொருட்கள் விற்ற கடையை பூட்டி சீல் வைத்த காவல்துறை வருவாய்த்துறை அதிகாரிகள்

புகையிலைப் பொருள்கள் விற்ற பங்க் கடையை பூட்டி சீல் வைத்த காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடை பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.

கீழ்பென்னாத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே இயங்கி வந்த ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான பங்க் கடையில் கீழ்பென்னாத்தூா் போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு கிலோ எடை கொண்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, வட்டாட்சியா் சரளா , காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி, உதவி ஆய்வாளா் பிரபு மற்றும் காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து கடையை பூட்டி சீல் வைத்தனா். தொடா்ந்து, இதுபோன்ற சோதனைகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா விற்பனை செய்த வாலிபரை சேத்துப்பட்டு போலீசார் கைது செய்து அதிகாரிகள் முன்னிலையில் கடைக்கு சீல் வைத்தனர்.

சேத்துப்பட்டு வந்தவாசி சாலை காமராஜர் சிலை அருகே உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட பான் பராக் குட்கா பாக்கு வகைகள் விற்பனை செய்வதாக சேத்துப்பட்டு போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி போளூர் டிஎஸ்பி கோவிந்தசாமி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் அந்த பெட்டிக்கடையில் திடீரென ஆய்வு செய்தனர்.

அப்போது தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டு கடையின் உரிமையாளர் தினேஷ் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரவி முன்னிலையில் போலீசார் கடைக்கு சீல் வைத்தனர் .பின்னர் கடை உரிமையாளர் தினேஷை கைது செய்தனர். தொடா்ந்து , இதுபோன்ற சோதனைகள் நடைபெறும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!