வளர்ந்த கட்சிகளுக்கு தேர்தல் தோறும் புதிய சின்னங்களை வழங்க, சீமான் வலியுறுத்தல்

வளர்ந்த கட்சிகளுக்கு தேர்தல் தோறும் புதிய சின்னங்களை வழங்க, சீமான் வலியுறுத்தல்
X

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சீமான்.

வளர்ந்த கட்சிகளுக்கு தேர்தல் தோறும் புதிய சின்னங்களை வழங்க வேண்டும் என, சீமான் வலியுறுத்தி உள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் போளூரில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நீட் தேர்வை ஒழிப்பது சாத்தியமில்லை. இதில் தமிழக அரசு நாடகமாடி வருகிறது. நீட் தேர்வை எதிர்த்து கைெயழுத்து இயக்கம் தொடங்குகிறார்கள்

இதை யாரிடம் கொடுப்பார்கள். மத்திய அரசிடம்தான் கொடுப்பார்கள். அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா?. அதேபோல் சாதிவாரி கணக்கெடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் பீகாரில் நிதிஷ்குமார் மத்திய அரசின் அனுமதி பெற்றா சாதிவாரி கணக்கு எடுத்தார். சாதிவாரி கணக்கெடுத்தால் தமிழகத்தில் பூர்வகுடி தமிழர்கள் எவ்வளவுபேர் இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும். அதற்காகத்தான் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுக்க தயங்குகின்றது.

தேர்தல் நேரத்தில் முக்கிய பிரமுகா்களின் வீடு, அலுவலகம் என பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்துவது வழக்கம்தான். காவிரி நீா் பிரச்னை, கச்சத் தீவு என பல்வேறு பிரச்னைகளை திமுக அரசு தீா்த்து வைக்காமல் உள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் தேவையில்லாதது. பொதுமக்கள் அரசிடம் இலவசம் கேட்டு போராட்டம் நடத்தினாா்களா? இலவசங்கள் தேவையில்லை. கல்வி, மருத்துவம் என பல்வேறு தேவைகளை இலவசமாக தரவேண்டும். தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற குறுக்கு எண்ணத்தில் மக்களுக்கு இலவசங்களை கொடுத்து அடிமை ஆக்குகின்றனர். இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி ஊழல் செய்து மக்களை முட்டாள் ஆக்குகின்றன.

வளா்ந்த நாடுகளில் தேர்தலின்போது வாக்குச் சீட்டு முறையே நடைமுறையில் உள்ளது. எனவே, இந்தியாவில் மின்னணு வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது.

திமுக, அதிமுக போன்ற வளா்ந்த கட்சிகளுக்கு தேர்தல்தோறும் புதிய சின்னங்களை வழங்க வேண்டும். நீண்ட காலமாக ஒரே சின்னத்தைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது 100 நாள் பணியினால் இன்று விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் 100 நாள் பணிகள் தேவையில்லை. நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. தனித்துதான் நிற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை, போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செங்கம், கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து நாம் தமிழா் கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி மைய பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

Next Story
ai robotics and the future of jobs